உள்ளூர் செய்திகள்

ஆசிரியருக்கு கீரின் சாம்பியன் விருது

ஆனைமலை: பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், பசுமைப்படை பொறுப்பாசிரியருமான பாலமுருகனுக்கு,தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 'கிரீன் சாம்பியன்' விருது வழங்கப்பட்டது. இவ்விருதுடன் பரிசு தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.பாலமுருகன் கூறுகையில், “இவ்விருதுக்குசொந்தக்காரர்கள் எனது மாணவர்கள் தான். ஒவ்வொரு மரக்கன்றையும் பராமரித்து, அதற்கு பள்ளி வேலை நேரம் முடிந்த பின் மாலையில் குடங்கள் வாயிலாக நீருற்றி பாரமரித்தனர். இந்த பரிசுத்தொகை மற்றும் இதற்கு முன்பு கோவையை சேர்ந்த தலைமையாசிரியர் ஜெகன்நாதன் நினைவாக கிடைத்த சிறந்த ஆசிரியருக்கான பரிசுத்தொகை, 50,000 ரூபாய் ஆகியவற்றை கொண்டு, இரண்டு லட்சம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு கலையரங்கம் கட்ட திட்டமிட்டு உள்ளேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்