விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, பழநி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி என 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 2 லட்சத்து 30 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் 1340 ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஏப்., 6ல் துவங்கிய இப்பணி ஏப்., 30 வரை தினமும் காலை 08:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடக்கின்றன. பழநி மையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, திண்டுக்கல் மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணிகளை கண்காணித்து வருகிறார்கள்.