உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், 22 சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், சேரும் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களால், தரமான கல்வி வழங்கப்படுகிறது.மேலும். இலவச சீருடை, சத்துணவு, பாதுகாப்பான தங்குமிடம் அனைத்து அரசு நலத் திட்டங்களும் கிடைக்கின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான கல்வி சேர்க்கை சேர விரும்புவோர் நேரடியாக சிறப்பு பள்ளிகளில் அணுகலாம்.மேலும், கூடுதல் தகவல்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்