உள்ளூர் செய்திகள்

கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஹவில்தார் வரை தகுதி உடைய முன்னாள் படைவீரர்கள், அவர்தம் சார்ந்தோர்களின் சிறார்கள் 2025 - 2026 கல்வி ஆண்டு, நிதி ஆண்டு 2026 - 2027க்கான மத்திய அரசின் ரக் ஷா மந்திரி விருப்புரிமை நிதி கல்வி உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்ச்சி பெற்றவர்களும், இளங்கலை பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பயில்வோர் பயன் பெறும் வகையில் www.ksb.gov.in என்ற இணைய தளத்தில் ஏப்., 1 முதல் நவ., 30 வரை பதிவு செய்யலாம். இதன் விபரங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்