மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இக்கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.ஏ., ஆங்கிலம், பொருளியல், பி.காம்., வணிகவியல், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 9 இளங்கலை பட்டப்படிப்பு வகுப்புகள் உள்ளன. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, பொது கலந்தாய்வு நேற்று துவங்கியது.கல்லூரி முதல்வர் ஜெயசங்கர் கலந்தாய்வை துவக்கி துவக்கி வைத்தார். நேற்று நடந்த கலந்தாய்வில், 210க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். காலை முதல் மாலை, மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு முடிவில், 156 பேர் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இந்த கலந்தாய்வு தொடர்ந்து, 18ம் தேதி வரை நடைபெறுகிறது.