உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி

கோவை: வேளாண் பல்கலை தாவர உயிரித் தொழில்நுட்பத்துறை சார்பில், உயர் செயல்திறன் மெல்லிய அடுக்கு குரோமட்டோகிராபி குறித்த பயிற்சி நடந்தது. பல்கலையின் பல்வேறு துறை மாணவர்கள் பங்கேற்றனர்.பயிற்சிக்கு தோட்டக்கலை டீன் வெங்கடேசன் தலைமை வகித்தார். பயிர் இனங்களில் மதிப்பு மிக்க உயிர்ச்சேர்மங்களை பகுப்பாய்வு செய்வதில் உயர் செயல்திறன் மெல்லிய அடுக்கு குரோமட்டோகிராபி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. தோட்டக்கலை பயிர்களில், புதிய உயிர்ச்சேர்மங்களைக் கண்டறியவும், நோய், பூச்சிகளுக்கு எதிர்ப்புத் தன்மையை வழங்கும் சேர்மங்களை அடையாளம் காணவும் புதிய ஆய்வு முறைகளை உருவாக்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டது.தாவர உயிரித் தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலா தேவி, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை இயக்குநர் செந்தில், நாக்பூர் ஆஸ்பையர் சயின்டிபிக் நிறுவன இயக்குநர் ஆஷிஷ் பன்சோட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்