உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் தேவஸ்தான அறக்கட்டளை சார்பில் 32ம் ஆண்டு கல்வி உதவித்தொகை, மாணவ, மாணவியருக்கு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, அறக்கட்டளை நிறுவனர் சிவ.குமரன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக, அறக்கட்டளை துணை நிறுவனர் சிவ.கந்தன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை நிறுவனர் சஞ்சீவி ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் 50 மாணவ மாணவியருக்கு, தலா, 1,000 ரூபாய் வீதம் 50,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.முன்னதாக, இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவியர் பங்கேற்ற சிறப்பு யோகாசனம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்