உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

கடலுார்: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கே.எஸ்.பி., மற்றும் பி.எம்.எஸ்.எஸ்.,சில் பெற தகுதி இல்லாத நிராகரிக்கப்பட்ட சிறார்களுக்கு மட்டுமே தொகுப்பு நிதி மூலம் கல்வி உதவித்தொகை அனுமதிக்கப்படும். ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கியதும் உதவித்தொகை கோரி ஜுன் 1 முதல் நவம்பர் 30 தேதி வரை மட்டுமே www.exwel.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு இணையதள முகவரியில் விண்ணப்பிக்க இயலாது. மேலும், விவரங்கள் அறிய அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசி (04142-220732) வாயிலாகவோ அணுகி பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்