தகுதியான மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கணும்
ஈரோடு: கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்குவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.கலெக்டர் கந்தசாமி, தலைமை வகித்து பேசியதாவது:மாணவர்களுக்கான கல்வி கடன் என்பது கடனல்ல; எதிர் காலத்துக்கான முதலீடு. பொருளாதார காரணத்தால் அவர்கள் படிக்க இயலவில்லை என்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க உதவுங்கள். கல்வித்தகுதி உடைய மாணவன், உயர் கல்வி படிப்பது தடைபடக்கூடாது. கல்லுாரிகளில் இருந்து வந்துள்ள பிரதிநிதிகள், கல்விக்கடன் திட்டம் குறித்து வழிகாட்ட வேண்டும். கல்விக்கடன் பெற இணைய தளத்தில் 'வித்யாலட்சுமி தளம்' (பி.எம்., வித்யாலட்சுமி) மூலம் விண்ணப்பிக்க பயிற்சி வழங்குங்கள். இவ்வாறு பேசினார்.