நந்தா கல்லுாரிகளின் சார்பில் வளாகத்தேர்வு
ஈரோடு: ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லுாரிகளில், இறுதியாண்டு படிக்கும் கணினி அறிவியல், பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு, “கேலிப்ரைன்ட்” நிறுவனத்தின் வளாகத் தேர்வு நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். “கேலி ப்ரைன்ட்” நிறுவன முதன்மை நிர்வாக அலுவலர் சேவியர் பாபு துவக்கி வைத்து பேசினார்.அவர் பேசுகையில், எங்களது நிறுவனத்தின் மூலம் ஸ்டார்ட் அப் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள்களை குறித்த காலத்தில் வழங்கி வருகிறோம். குறிப்பாக ஏ.ஐ., பிளாக்செயின் மற்றும் வெப் - 3 துறைகளுக்கு மென்பொருள் வடிவமைப்பாளர்கள், தர உறுதி வல்லுனர்கள், யு.ஐ., மற்றும் யு.எக்ஸ்., வல்லுனர் கொண்ட குழுக்கள் கணினி தீர்வுகளை வழங்கி வருகின்றன என்று தெரிவித்தார். தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்த கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆசிரியர்களை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்களான நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.