எஸ்.என்., கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி கணித முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, சார்பில் கணித மாதிரியாக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கீட்டு அறிவியல் என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச மாநாடு நடந்தது.கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். கணிதத் துறை தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அங்காளீஸ்வரி, பேராசிரியர் முகமது அலி உட்பட பலர் பங்கேற்றனர்.குவாங்சி பெய்பு வளைகுடா பல்கலை இயற்கை அறிவியல் துறை இணைப் பேராசிரியர் நல்லப்பன் குணசேகரன், அடுத்த தலைமுறை நிலைத்தன்மை மற்றும் இயந்திரக் கற்றல் உட்பட தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். அழகப்பா பல்கலை கணித துறைத் தலைவர் அன்பழகன், 'முடிவெடுப்பதில் கணித மாதிரிகளை பயன்படுத்தல்' குறித்து விளக்கினார்.சென்னை டேட்டா எவர் கன்சல்டிங் நிறுவன பேராசிரியர் சம்பத் பார்த்தசாரதி, செயற்கை நுண்ணறிவின் பின்னணியில் கணிதம் குறித்து பேசினார். தியாகராஜர் பொறியியல் கல்லுாரி தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டெய்சி செயற்கை நுண்ணறிவு குறித்து பேசினார். பேராசிரியர் மீனா நன்றி கூறினர்.