அரசு பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவள்ளி தலைமை தாங்கினார்.விருத்தாசலம் அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சந்திரா போக்சோ குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.