உள்ளூர் செய்திகள்

வேளாண் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

கமுதி: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வினாடி வினா போட்டி நடந்தது. உதவிப் பேராசிரியர் ராஜகோபாலன் வரவேற்றார். எச்.ஐ.வி., தொற்று பரவும் வழிகள், தடுப்பு முறைகள், பரிசோதனை முக்கியம் குறித்து விளக்கினர்.எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள், எதிரான பாகுபாட்டை தடுப்பது, தனி உரிமை, ரகசிய தன்மையை பாதுகாப்பது, சிகிச்சை சுகாதார சேவைகளை அணுகுவதற்கான உரிமை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடின்றி, மனித நேயத்துடன் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆலோசகர் மல்லிகா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின் வினாடி வினா போட்டியில் இந்தியாவின் வரலாறு, பண்பாடு, அறிவியல், விளையாட்டு, பொருளாதாரம், சமகால நிகழ்வுகள் குறித்து கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் ரஞ்சிதம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்