குறுமைய போட்டியில் அரசுப்பள்ளி முதலிடம்
உடுமலை: பள்ளிக் கல்வித்துறை சார்பில், உடுமலை குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில் காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கைப்பந்து ஜூனியர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.எறிபந்து போட்டியில் மூத்தோர் பிரிவில் முதலிடம் பிடித்து, திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்னர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.