உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் உளவியல் ஆலோசகர் வேண்டும்

கோவை: திருப்பூர் மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள், தலைமையாசிரியரை தாக்கிய சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்தும், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, கோவையில் ஆசிரியர் சங்கங்களின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.மாணவர்களை முறையாக கையாள ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.பள்ளிகளில் துாய்மைப் பணியாளர்கள், இரவுக்காவலர்களை நியமிப்பதுடன், கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்