உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்வி

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, ச.கு. வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கல்வி நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் அனந்தகுமார் தலைமை தாங்கினார். வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஐ.சி.டி.சி., டெய்சி ராணி , மாணவர்களின் உடல் ஆரோக்கியம், கல்வியின் முக்கியத்துவம், கல்வியால் ஏற்படும் எதிர்கால பயன்கள், கல்விக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு, சமுதாயத்தில் உள்ள எச்.ஐ.வி., பால்வினை நோய், காசநோய், டெங்கு, மலேரியா, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மாணவிகளுக்கு அதிகம் ஏற்படும் ரத்த சோகை மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு, வாழ்க்கை கல்வி உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நிகழ்ச்சியை ஆசிரியர் சரவணன் ஒருங்கிணைத்தார். ஆசிரியர் முருகவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்