உள்ளூர் செய்திகள்

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்: ஆண்டுதோறும், அக்., கடைசி வாரத்தில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்தாண்டு, கடந்த, 26 முதல் வரும், நவ., 1 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில், 'நேர்மைக்கான உறுதிமொழி' ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார்.மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்.எஸ்.ஐ., பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., சுபாஷினி பேரணியை துவக்கி வைத்தார். பள்ளியில் துவங்கிய பேரணி, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பூங்சா சாலை, மணிக்கூண்டு வழியாக சென்று, மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது. அதில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை மாணவ, மாணவியர் ஏந்தி சென்றனர்.மேலும், லஞ்சத்தை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.ஐ., பாலன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்