உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு மாணவர் பதிவேற்ற அவகாசம்

திருப்பூர்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்ற நவ., 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.2026 - 27ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. இதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர் விவரங்களை அக்., 14 முதல், 31ம் தேதிக்குள்ளும், பிளஸ் 2 மாணவர் விவரங்களை அக்., 22 முதல், 31ம் தேதிக்குள்ளும் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், சில பள்ளிகளில் மாணவர் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையாததால், பதிவேற்றத்துக்கான கால அவகாசத்தை நவ., 14ம் தேதி வரை நீட்டித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்