வள்ளலார் பள்ளியில் திருக்குறள் வகுப்பு
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் திருக்குறள் நீதி போதனை வகுப்பு நடந்தது..பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், சங்கை குறிஞ்சி தமிழ்ச் சங்கத் தலைவர் செல்வமணி, செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். நகர திருக்குறள் பேரவைச் செயலாளர் லட்சுமிபதி வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர் இளையாப்பிள்ளை திருக்குறள் வகுப்பு நடத்தினார்.அதிக திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் சவுந்தர் பரிசு வழங்கினார். பட்டி மன்ற பேச்சாளர் சாந்தகுமார் விபத்தில்லா தீபாவளி குறித்து பேசினார். வள்ளலார் மன்ற துணைத் தலைவர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.