தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
உடுமலை: திருப்பூரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 20ம் தேதி, காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அறை எண். 439ல் நடக்கிறது.மாவட்டத்திலுள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். இம் முகாமில், 10, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், சுயதகவல் படிவம் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு 94990 55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.