உள்ளூர் செய்திகள்

டெல்லியில் உயர்கல்விக்கான தேசிய மாநாடு

உயர்கல்வி சம்பந்தமான தேசிய மாநாடு டெல்லியில் மார்ச் 9 ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். உயர்கல்வியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது, மருத்துவ கல்வி, தொழிற்கல்வி ஆகியவற்றின் எதிர்காலம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் கல்வி கொள்கையை வடிவமைத்தல் போன்றவைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. புகழ்பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் முன்னிலையில், மனிதவளத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மனிதவள இணையமைச்சர் புரந்தேஸ்வரி உள்ளிட்ட 70 முக்கிய பிரமுகர்கள் உரையாற்ற உள்ளனர். "இந்திய உயர்கல்வியின் எதிர்காலத்தை கட்டமைப்பது" என்பதுதான் இந்த மாநாட்டின் கருப்பொருள். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் யு.ஏ.இ. உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து 30 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த மாநாட்டில், இந்திய கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும். மேலும் பல தலைப்புகளை கலந்துரையாடும் விதமாக 4 வொர்க் ஷாப்கள் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்