ஐ.ஐ.எம்.-கொல்கத்தாவில் புதிய பாடப்பிரிவுகள்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கொல்கட்டாவில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய பாடப் பிரிவுகளை சேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்று ஐ.ஐ.எம். தலைவர் சாகட்டா ராய் கூறினார். பொதுவாகவே எல்லா ஐ.ஐ.எம்.களிலும் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மாணவிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 80க்கு 20 என்ற விகிதத்தில்தான் மாணவிகள் உள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும், மாணவிகளுக்கு ஐ.ஐ.எம்.ல் சேருவதற்கான ஆர்வத்தை உருவாக்க வேண்டும். இதுவரை மாணவர்களுக்கேற்ற பாடப்பிரிவுகள் தான் உள்ளன. இனி மாணவிகளுக்கான சிறப்பு பாடப்பிரிவுகளையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல, நிர்வாகம் சார்ந்த படிப்புகளில் சுமார் 1000 மாணவர்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது சுய நிதியுடன் செயல்படும் பாடப்பிரிவாகும். பல நல்ல பாடப்பிரிவுகளைக் கொண்டு வர அரசின் நிதியுதவி மிகவும் அவசியமாக உள்ளது. இதுபோன்ற பாடப்பிரிவுகளை இளநிலை, முதுநிலை என சேர்ந்து அளிப்பது சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.