உள்ளூர் செய்திகள்

கோவை வழிகாட்டி நிகழ்ச்சி நிரல்

"தினமலர்" நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்.பல்கலை இணைந்து நடத்தும், "வழிகாட்டி" நிகழ்ச்சி, இன்று கோவை கொடீசியா தொழிற் கண்காட்சி வளாகத்தில் துவங்குகிறது. வரும் 27ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியையொட்டி, நூற்றுக்கணக்கான அரங்குகளில் உயர்கல்வி படிப்புகளின் விவரங்கள் வாரி வழங்கப்படுகின்றன. சிறந்த உயர்கல்வி வழிகாட்டியாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள், பெற்றோர், கல்வி நிறுவனங்களின் பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்று வரும், "வழிகாட்டி&' நிகழ்ச்சியில், இந்த ஆண்டு தற்போதைய உயர்கல்வி டிரெண்டுக்கு ஏற்ப கவனமாக தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தினமலர் கோவையில் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியின் விவரம் உங்களுக்காக.. இன்று காலை 10.00 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியை, எஸ்.ஆர்.எம். பல்கலை இயக்குனர் (அட்மிஷன்ஸ்) முத்து சுப்ரமணியம் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும், கல்வி ஆலோசனை கருத்தரங்கில் "வளமான வேலை வாய்ப்புகள் வழங்கும் பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங்&' படிப்பு குறித்து, எஸ்.ஆர்.எம்.பல்கலை பேராசிரியர் தங்கவேல் ஆலோசனை வழங்குகிறார். "எந்த படிப்பை தேர்வு செய்யலாம்? எந்த படிப்புக்கு நல்ல வேலை வாய்ப்பு?&' என்பது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவாக பதில் தருகிறார் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி. எந்த "கட் ஆப்&' மார்க் பெற்றால் எந்த படிப்புக்கு சீட் கிடைக்கும்?&' என்பது குறித்தும் இவர் விளக்குகிறார். "எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான வேலை வாய்ப்புகள்" குறித்து கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசுகிறார். "கம்ப்யூட்டர் துறையின் தற்போதைய போக்குகள்&' குறித்து விளக்குகிறார், டி.சி.எஸ்., நிறுவனத் துணைத் தலைவர் ஹேமா கோபாலன். "கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பின் எதிர்காலம்" குறித்து பல பயனுள்ள ஆலோசனைகள் வழங்குகிறார் எஸ்.ஆர்.எம். பல்கலை விரிவுரையாளர் ஸ்ரீதர். உயர்கல்வி படிப்புகள் குறித்த மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விக்கும் கல்வி ஆலோசகர்கள் தெள்ளத் தெளிவான பதில் அளிக்க காத்திருக்கின்றனர். கடல்சார் படிப்புகள், மீடியா துறை, ஹெல்த் சயின்சஸ், சி.ஏ.,உள்ளிட்ட படிப்புகள் குறித்து நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது. பங்கேற்கும் மாணவர்களுக்கு, "எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது?&' என்ற தகவல்களை அள்ளி வழங்கும் கையேடு இலவசமாக வழங்கப்படும். மாணவர்களுடன் பெற்றோரும் பங்கேற்கலாம். கல்வி ஆலோசனை கருத்தரங்குகளில் பங்கேற்கவும், கல்வி நிறுவன அரங்குகளை பார்வையிடவும் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரையும் கருத்தரங்குகளில் ஆலோசனை பெறலாம். மாலை 6.00 மணி வரை மீதமுள்ள நேரம் முழுவதையும் கல்வி நிறுவன அரங்குகளில் செலவிடலாம். இந்த அரங்குகளில் விண்ணப்பம் பெறலாம்; விரும்பினால் "ஸ்பாட் அட்மிஷன்" கூட போட்டுக் கொள்ளலாம். இலவச பஸ் வசதி, சுவையான உணவு, விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உண்டு. "வழிகாட்டி&' நிகழ்ச்சி நடைபெறும் கொடீசியா அரங்குக்கு செல்ல, கோவை அவினாசி ரோடு சந்திப்பில் இருந்து இலவச பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்புறம் என்ன மாணவர்களே...! எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க இப்போதே புறப்பட்டு வாங்க...! பெற்றோர்களும் வாங்க...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்