உயர் கல்வியில் பொறியியலுக்கு முதலிடம்
இந்த தொகையானது கடந்த ஆண்டைக் காட்டிலும் 30% (ரூ.9,838 கோடி) அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மாநிலங்களில் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி குறித்த ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. அடுத்தபடியாக, ரூ.5,366 கோடி ரூபாய் கலை மற்றும் அறிவியல், வணிகவியல் பட்டப்படிப்புகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. டிப்ளமோ பாடப்பிரிவுகள் (ரூ.4,919 கோடி) மூன்றாம் இடத்திலும், மருத்துவக் கல்வி ரூ.4,473 கோடி ரூபாயுடன் நான்காம் இடத்திலும் உள்ளது. 1990ஆம் ஆண்டில் இருந்து கல்வித் துறையில் தனியார் ஆதிக்கம் தலைதூக்கியது. இந்த 20 ஆண்டுகளில் தனியார் கல்வி நிலையங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவிட்டன. ஆனால் எல்லா மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தனியார் கல்வி நிலையங்கள் ஒரு சில மாநிலங்களில் அபரிமிதமாகவும், சிலவற்றில் மிகக் குறைந்த அளவிலும் காணப்படுகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பெருகுவது கல்வித் துறையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று நம்ப முடியாது. கல்வித் தரம் உயர வேண்டும். கற்பிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் தனியார் கல்வி நிலையங்களின் வருகை கல்வித் துறையின் வளர்ச்சியாக இருக்கும் என்றும் அந்த ஆய்வின் அறிக்கை கூறுகிறது.