உள்ளூர் செய்திகள்

மனதுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுங்கள்

வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. வேலையின் பின்னால் ஓட வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு என்ன பிடிக்கிறதோ, உனக்கு என்ன தேவையோ அதைப்படிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்திருக்கும் இந்தத் தருணம், வாழ்வின் முக்கியமான தருணம். திருப்புமுனை தரும் தருணமும் கூட.  எந்தப் படிப்புக்கும் வேலை கிடைக்கும். எப்படி படித்திருக்கிறீர்கள், அந்த துறையில் என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ராணுவத்தில் 30% காலிப்பணியிடம் இருக்கிறது. மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும் வேலையும் இருக்கிறது. படித்து முடித்தபின் உங்களுக்கு என்ன வேண்டும். பணமா, அதிகாரமா, புகழா, சாதிக்கும் தன்மையா அல்லது அங்கீகாரமா அதை முதலில் முடிவு செய்யுங்கள். மனிதனுக்கு அங்கீகாரம் முக்கியம். வெறும் பணத்தைச் சம்பாதிப்பது நோக்கமல்ல. பொறியியல் படித்து விட்டு மாதம் 12 ஆயிரம் ஊதியம் பெறுபவரையும் எனக்குத் தெரியும்; மாதம் 10 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் முடிதிருத்தும் கலைஞரையும் எனக்குத் தெரியும். எனவே, இவ்வளவு வேலை காலி இருக்கிறது; அதனால், அந்தத் துறையை தேர்வு செய்யலாம் என்பது தவறு. பிடித்தமான, உன்னிடம் உள்ள திறமையை ஒத்த படிப்பைத் தேர்வு செய்யுங்கள். இந்தியாவின் மிக உயர்ந்த அரசுப்பணி குடிமைப்பணி. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என அதிகாரம் மிக்க பதவிகள். அதற்கு இப்போதிருந்தே தயாராகுங்கள். தகவல் தொடர்புத்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். செய்தித்தாள் படியுங்கள். முதல்நிலை, பிரதானம், நேர்முகத்தேர்வு என மூன்று தேர்வுகளை வெற்றிகரமாக முடித்தால் நீங்களும் ஒரு ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ். ஏழையாக இருப்பதற்கும் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஆவதற்கும் தொடர்பில்லை. தினமும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கு எப்படி தயாராவது எனத் தெரிந்து கொள்ளுங்கள். மிகக்குறைந்த வயதில் அதிகபட்ச அதிகாரத்தை குடிமைப்பணிதான் தரும். மக்களுக்கு சேவை செய்யலாம். அதிகபட்ச திருப்தி கிடைக்கும். கல்லூரி முடித்தவுடன், தேர்வு எழுதினால், 26 வயதில் கலெக்டராகவோ, போலீஸ் அதிகாரியாகவோ வரலாம். கம்பீரமான வேலை. கொஞ்சம் முயற்சி செய்தால் போதும். தொடர்ந்து முயலுங்கள்; உங்களால் முடியும். இவ்வாறு, சைலேந்திரபாபு பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்