உள்ளூர் செய்திகள்

இணையதளத்தில் பள்ளி பாடப்புத்தகங்கள் வெளியீடு!

தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சிடப்படும் இந்த புத்தகங்கள் அனைத்து மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. என்றபோதிலும், பாடநூல் தொலைந்து போனாலோ, சேதமடைந்தாலோ மாணவர்கள் கவலையகின்றனர். மற்றொரு புத்தகம் கொடுப்பதும் சாத்தியமில்லாமல் போகிறது. இதனால், எந்த பகுதியில் இருந்தாலும் புத்தகத்தில் உள்ள பாடங்களை படித்துக்கொள்ளவும், பதிவிறக்கம் (டவுண்லோட்) செய்துகொள்ளவும் வசதியாக, இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. மூலம் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மொத்தம் உள்ள 529 பாடங்களில் இதுவரை 348 பாடங்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாடநூல் கழகம் இலவசமாக வழங்கும் மாநில பாடத்திட்ட புத்தகங்களை தவிர, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பாட புத்தகங்கள் மட்டும் இப்போது அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இலவசமாக வழங்கப்படும் புத்தகங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கும் நிலை மாறி, விற்பனை செய்யப்படும் 10ம் வகுப்பு மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பாடப்புத்தகங்களும், ஆசிரியர் பட்டயப் பயிற்சி புத்தகங்களும் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, 10 மெட்ரிக் புத்தகங்கள், 9 ஆங்கிலோ இந்தியன் பாடப்புத்தகங்கள், 11 ஆசிரியர் பட்டயப்பயிற்சி புத்தகங்கள், ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகங்கள் 14 என மொத்தம் 44 புத்தகங்களையும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் மேலாண் இயக்குநர் ஹேம்மந்த்குமார் சின்ஹா கூறுகையில், ‘மொத்தம் உள்ள 529 பாடப்புத்தகங்களில் 12ம் வகுப்பு தொழிற்பாடப்பிரிவுக்கான 137 பாடங்கள் மட்டுமே இணையதளத்தில் இல்லை. இவற்றையும் இணையதளத்தில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதற்காக 50 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இவை அடித்தவாரம் விநியோகிக்கப்படும். 2009ம் ஆண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை‘ என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்