குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 முதல்நிலைத் தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், ஜூன் 8 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் துவங்குகிறது. இலவசாக பாடக்குறிப்புகள், பாடவாரியான தேர்வுகள், முழு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். பங்கேற்போர் https://forms.gle/zuHWWSgJEzK7WMNR9 என்ற கூகுள் லிங்கில் பதிவு செய்யலாம்.studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் சுகபுத்ரா கூறினார்.