உள்ளூர் செய்திகள்

கதக் அரசு பள்ளியில் 100 சதவீதம் சேர்க்கை

கதக்: கதக்கின் நரேகல்லில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. ஆரம்பத்தில் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது. இதை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள், பல வழிகளை கையாண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், மதிய உணவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.தினமும் சாதம், சாம்பாருடன் கோதுமை பாயசம், கடலைப்பருப்பு போளி, லட்டு, மைசூரு பாக், ஜிலேபி என ஏதாவது ஒரு இனிப்பு வழங்குகின்றனர். இனிப்பு வழங்க தினமும் 2,000 ரூபாய் செலவாகிறது. இனிப்பு வழங்குவது, அரசின் மதிய உணவு திட்டத்திற்கு தொடர்பில்லாதது. எனவே நரேகல் பகுதி மக்கள், இந்த செலவை ஏற்றுள்ளனர். நன்கொடை வழங்குகின்றனர். இந்த திட்டத்துக்கு பள்ளி வளர்ச்சி கமிட்டி, அம்ருத் பூஷண் என பெயர் சூட்டியுள்ளது.பள்ளி வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது:பள்ளியில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ளது. 125 மாணவர், 182 மாணவியர் என, 307 மாணவர்கள் படிக்கின்றனர். அனைவருமே வகுப்புகளுக்கு ஆஜராகின்றனர். பள்ளியில் இனிப்பு வழங்குவதுடன், விளையாட்டு, பாடங்கள் சாராத நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களை ஈர்க்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்