உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லுாரிக்கு செப். 11 விடுமுறை

சிவகங்கை: சிவகங்கை உட்பட 4 தாலுகாவில் செப்., 11 அன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்., 11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அன்றைய தினம் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி தாலுகாவிற்குள் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக செப்., 23 அன்று பள்ளி, கல்லுாரிகள் இயங்கும். அதே போன்று கீழடி தொல்லியல் அருங்காட்சியகமும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்