முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரியில் 1,135 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள்
ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரியின், 22வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் செயலாளர், நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் குணசேகரன், பட்டம் பெற்ற மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தார்.விழாவில் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் அறங்காவலர் அம்மணி கந்தசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் உமாராணி குணசேகரன், இணை செயலாளர் ராகுல் ஆகியோர் மாணவ, மாணவியரை பாராட்டினர்.டைட்டான் ஓசூர் நிறுவனத்தின் பொது மேலாளர் வேணுகோபால், கிருஷ்ணகிரி டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சிறப்பாளர்களாக பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தி பேசினர். விழாவில் பி.இ., எம்.இ., எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., ஆகிய துறைகளை சேர்ந்த மாணவ, மாணவியர், 1,135 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.முன்னதாக முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் பேராசிரியர் வேணுகோபால், கல்லுாரி மற்றும் தொழிற்துறை தொடர்புத்துறை இயக்குனர் அய்யாகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.