உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்! நவ., 13ல் நடைபெறும்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ., 13 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.வேலைவாய்ப்பற்ற இளைஞரின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நவ., 13 அன்று காலை 10:30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பை வேலை இல்லாதவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பம், போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டம் முடித்தோர், ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்று வேலை பெறலாம். முகாமிற்கு உரிய கல்வி சான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் பங்கேற்கவும். இதில் பங்கேற்போருக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்