உள்ளூர் செய்திகள்

மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கு ரூ.14 கோடி கல்விக் கட்டணம் வழங்கல்

புதுச்சேரி: சென்டாக் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவித்தொகையாக 14 கோடி ரூபாய் தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சென்டாக் மூலம் மருத்துவம், பொறியியல் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டு, தனியார் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்பிற்கு ஆண்டிற்கு 2.25 லட்சம் ரூபாயும், பொறியியல் படிப்பிற்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த 2013-14ம் ஆண்டில் 7 தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 391 மாணவர்களின் நிதி உதவி தொகையாக 8.64 கோடி ரூபாயும், பொறியியல் படிப்பு தேர்வு செய்து 12 தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த 2160 மாணவர்களின் நிதி உதவித்தொகையாக 5.40 கோடி ரூபாயும், தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் வழங்கும் நிகழ்ச்சி வணிக வரித்துறை அலுவலகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, நிதி உதவிக்கான காசோலையை கல்லூரி நிர்வாகங்களிடம் வழங்கினார். உயர்கல்வித்துறை இயக்குநர் கரிகாலன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 2011-12ம் ஆண்டு வரை காலதாமதமாக பெறப்பட்ட 128 மருத்துவ மாணவர்களுக்கான நிதி 1.36 கோடி ரூபாயும், 884 பொறியியல் மாணவர்களின் நிதியான 1.63 கோடி ரூபாயும் வங்கி மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 21 கோடி ஒதுக்கீடு நடப்பு 2014-15ம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்காக காமராஜர் கல்வி உதவித் திட்டத்திற்கு 21.85 கோடி ரூபாய் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் இதுவரை 3,563 மாணவர்களுக்காக 17.02 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்