உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் விழா ரூ.14 கோடி ஒதுக்கீடு

சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த ரூ.14 கோடியை தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக நடத்திடவும், மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்திட ஏதுவாக அரங்கம் அமைத்து சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்திட, பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து கொண்டாட பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.100 மாணவர்களுக்கு மேலே உள்ள பள்ளிகளுக்கு ரூ.4000, 100 மாணவர்களுக்கு கீழே உள்ள பள்ளிகளுக்கு ரூ.2500, 500 மாணவர்களை கொண்ட பள்ளிக்கு ரூ.8000ம், 1000 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு ரூ.15 ஆயிரம், 2000 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு ரூ.30ஆயிரம், 2 ஆயிரத்துக்கு மேல் கொண்ட மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 50 ஆயிரமும் அரசு ஒதுக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்