உள்ளூர் செய்திகள்

கோவை அண்ணா பல்கலை., 15வது பட்டமளிப்பு விழா

வடவள்ளி: அண்ணா பல்கலை., கோவை மண்டல வளாகத்தின், 15வது பட்டமளிப்பு விழா, பாரதியார் பல்கலையில் உள்ள அரங்கத்தில் நேற்று நடந்தது.அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தலைமை வகித்தார். இளங்கலை பிரிவில், பி.இ., மெக்கானிக்கல், பி.இ., (இ.சி.இ.,), பி.இ., (இ.இ.இ.,), பி.இ., (சி.எஸ்.இ.,), முதுகலை பிரிவில், எம்.பி.ஏ., ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற, 10 மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.பல்கலை., அளவில் மூன்றாமிடம் பிடித்த இயந்திரவியல் துறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவனுக்கும், 18வது இடம் பிடித்த மெர்சி யுனைட்ஸ் என்ற மாணவிக்கும், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.தொடர்ந்து, 265 மாணவ, மாணவிகளுக்கு, அண்ணா பல்கலை., துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணை தலைவர் சுகில் குமார் பட்டங்களை வழங்கினர்.விழாவில் சுகில் குமார் பேசுகையில், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கோவை அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில், விண்வெளி மற்றும் பாதுகாப்பிற்கான வசதி மையத்தை உருவாக்கி வருகிறோம்.இந்த துறையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளரவும், பல தொழில் முனைவோரை உருவாக்கவும், மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தவும், புதிய படைப்புகளை உருவாக்கவும் இம்மையம் உதவும். டாடா டெக்னாலஜிஸ், வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில், அண்ணா பல்கலையுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது, என்றார்.முன்னதாக, மண்டல வளாக டீன் சரவணகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். பல்கலை பதிவாளர் பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்