உள்ளூர் செய்திகள்

கோச்சிங் சென்டர்களிடமிருந்து ரூ.1.56 கோடி: மாணவர்களுக்கு பெற்று தந்த மத்திய அரசு

புதுடில்லி: தனியார் பயிற்சி மையங்களிடம் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 1.56 கோடி ரூபாயை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை பெற்று, திருப்பி தந்துள்ளது.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வங்கி அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் என பல்வேறு பதவிகளுக்கு நாடு முழுதும் தனியார் நிறுவனங்கள் பயிற்சி அளித்து வருகின்றன.நடவடிக்கைமருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கும் புற்றீசல் போல் பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன.இதில், ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரு சில பயிற்சி மையங்களின் நடவடிக்கையால் திருப்தியடையாத மாணவர்கள், பாதியிலேயே நிற்பதும் ஆங்காங்கே நடக்கின்றன.அதேபோல், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, மாணவர்கள் பயிற்சியை தொடர முடியாத சூழலும் அரங்கேறுகின்றன. பயிற்சிக்கு முன்பே பணம் கட்ட சொல்லும் மையங்கள், பாதியிலேயே நின்றவர்களுக்கு தொகையை திருப்பி தருவதில்லை.இதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளன. அவ்வாறு பணத்தை திருப்பி பெற முடியாத சில மாணவர்கள், மத்திய அரசின் தேசிய நுகர்வோர் விவகாரங்கள் துறையை நாடி தங்கள் புகார்களை பதிவு செய்தனர்.அவர்களுக்கு தேசிய நுகர்வோர் உதவி மையம் வாயிலாக உதவி செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக பணத்தை பெற முடியாமல் தவித்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், நுகர்வோர் உதவி மையத்தின் வாயிலாக தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிற்சி மையங்களால் அலைக்கழிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, 1.56 கோடி ரூபாய் திரும்பப் பெற நுகர்வோர் விவகாரங்கள் துறை உதவியுள்ளது.கடமைபயிற்சி மையங்கள் அனைத்தும் மாணவர்களின் நலன் சார்ந்து இருக்க வேண்டும்.அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது பயிற்சி மையங்களின் கடமை. அவ்வாறு செய்யாத மையங்கள், மாணவர்களின் பணத்தை திருப்பித் தருவதுதான் நியாயம் என, தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்