கல்வி கற்பதில் இந்தியர்களுக்கு 2ம் இடம்
சென்னை: “கல்வி கற்றுக் கொள்வதில் உலகளவில் சீனர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள்,” என எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். சுடர்வம்சம் சமுதாய விழிப்புணர்வு அமைப்பின் 4வது ஆண்டு சேவையாக, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் 44 மாணவர்களுக்கு, தலா 1,000 ரூபாய் உதவி வழங்கப்பட்டது. துபாய் தொழிலதிபர் கீழை சீனா தானா, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோருக்கு சமுதாயச் சுடர் விருது வழங்கப்பட்டது. வரவேற்பு உரையாற்றிய சுடர்வம்சம் நிறுவனர் ரகுராஜ், “நம்மைச் சுற்றி நம் மக்கள் தான் இருக்கின்றனர் என்பதை மறந்து விடுகிறோம். சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்,” என்றார். சுடர்வம்சம் அமைப்பின் சந்திரன்சாமி பேசுகையில், “படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் படிக்கும் படிப்பு, எனக்குத் தான் உதவப் போகிறது என்ற எண்ணம் வேண்டும்,” என்றார். முயற்சி கண்டிப்பாக வெற்றியைத் தரும். பண மில்லாததால், கார்கோ கப்பலில் வெளிநாடு சென்ற ஒருவர், தற்போது 70 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குகிறார். நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு ‘சீனா தானா டிரஸ்ட்’ உதவும். இவ்வாறு கீழை சீனா தானா பேசினார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:உலகளவில் கல்வியில் சிறந்த நாடுகளில் முதல் 5 - 6 ரேங்க் பெறுபவர்கள் சீனர்கள். மாணவர்களிடம் கண்டிப்பு காட்டும் ஆசிரியர்களை வெறுக்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு நன்மை செய்பவர்கள். மொழியில் வல்லவரனால், அது உங்களுக்கு உதவும். நீங்கள் வளர்ந்து நல்ல நிலைக்கு வரும்போது, ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். இவ்வாறு லேனா தமிழ்வாணன் பேசினார். சுடர்வம்சம் நிர்வாகி கமலக்கண்ணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.