துணை மருத்துவ படிப்புகளுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கு, 21,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப பதிவு, 23ம் தேதி துவங்கியது. ஜூன் 21 வரை பதியலாம். ஐந்து நாட்களில், 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.