உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வுகள் 28ம் தேதி துவக்கம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் 28ம் தேதியான திங்கட்கிழமை துவங்குகிறது. 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் மாதம் 11ம் தேதி முடிகின்றது. மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் கடந்த 22ம் தேதி துவங்கி, ஏப்ரல் மாதம் 11ம் தேதி முடிகின்றது. அதேப்போல, கடந்த 2ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போதே துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை மார்ச் 28, திங்கள்  - மொழித் தாள் 1மார்ச் 29 செவ்வாய் - மொழித் தாள் 2மார்ச் 31 வியாழன் - ஆங்கிலத் தாள் 1 ஏப்ரல் 1 வெள்ளி - ஆங்கிலத் தாள் 2ஏப்ரல் 5 செவ்வாய் - கணிதம்ஏப்ரல் 8 வெள்ளி - அறிவியல்ஏப்ரல் 11 திங்கள் - சமூக அறிவியல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்