தமிழகத்தில் பரவலாக கனமழை: 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மதுரை: தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக மதுரை, திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 09) விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக கனமழை கொட்டி வருகிறது, இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தேனி, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.