உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம் இயற்பியல் துறை சார்பில், புவி அறிவியல் துறை அரங்கில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் கோகுல்ராஜ் வரவேற்றார். பேராசிரியர் கிளிமெண்ட் சகாயராஜா லுார்து, தலைமை தாங்கினார். பெங்களூரு இஸ்ரோ சந்திரயான்-3 திட்ட இயக் குநர் வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.அதில், சந்திரயான்-3 வெற்றி கரமான ஏவுதலையும், பயணத்தின் பாதையையும், நிலவில் சந்திரயான் தரை இறங்கிய நிகழ்வையும், நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவரின் பங்குகளையும் எளிமையாக விளக்கினார். லேண்டர் நிலவில் பாதுகாப்பாக இறங்குவதற்கு விஞ்ஞானிகள் ஆற்றிய கவனமான பணியையும் எடுத்துரைத்தார். நிகழ்சியில் இயற்பியல், வேதியியல் மற்றும் புவிஅறிவியல் மாணவர்கள் மற்றும் பல்வேறு பாடப்பிரிவை சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் விஞ்ஞானியுடன் கலந்துரையாடினர்.ஏற்பாடுகளை இயற்பியல் துறையின் தலைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து பேராசிரியர்கள் செய்திருந்தனர். இயற்பியல் துறையின் பேராசிரியர் அசோக்ஷரண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்