உள்ளூர் செய்திகள்

பஸ்சில் ரகளை 3 மாணவர்கள் கைது 30 பேர் மீது வழக்கு

கீழ்ப்பாக்கம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லுாரியில், கடந்த 9ம் தேதி சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு தாமதமாக வந்த மாணவர்களுக்கு, கல்லுாரி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, டெய்லர்ஸ் சாலை சந்திப்பில், கோஷம் எழுப்பி பேரணியாக சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த, பிராட்வே - கோயம்பேடு செல்லும் தடம் எண்: 15பி மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து, பேருந்தின் கூரையில் ஏறிய செங்குன்றத்தைச் சேர்ந்த ஜீவா, 20, கன்னிகைபேர் பகுதியைச் சேர்ந்த பவித்ரன், 20, திருவள்ளூரைச் சேர்ந்த புவியரசன், 19, ஆகிய மூவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.இவர்கள் மூவரும் பச்சையப்பன் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ஜீவா மீது ஏற்கனவே நான்கு வழக்குகளும், புவியரசன் மீது ஒரு வழக்கும் உள்ளன.மூவரையும், நேற்று முன்தினம் இரவே போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அதேபோல், சம்பவத்தன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, 30 மாணவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்