ஜப்பானில் தொடக்கப்பள்ளியில் தீ; 300 பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சிக்கி தவிப்பு
டோக்கியோ: ஜப்பானில் தொடக்கப்பள்ளியில் தீ பிடித்ததில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பீதி அடைந்தனர்.இது பற்றிய விவரம் வருமாறு:டோக்கியோ உள்ள தொடக்கப்பள்ளியில் எப்போதும் போல் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்திருந்தனர். பாட வேளைகளும் நடந்து கொண்டு இருந்தன.4 மாடிகள் கொண்ட இந்த பள்ளியில் மேல்தளத்தில் உள்ள வகுப்பறையில் திடீரென தீப்பிடித்தது. இந்த விவரத்தை அறிந்த மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் அச்சம் அடைந்தனர்.உடனடியாக இது குறித்து உள்ளூர் போலீசாருக்கும், தீயணைப்பு மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அவர்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீயை அவர்கள் கட்டுப்படுத்தினர். தீப்பிடித்த போது, அதில் சிக்கி தவித்த பெரும்பாலானவர்கள் புகையை சுவாசித்து மயங்கி விழுந்தனர்.ஆசிரியர் ஒருவரும், 2 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட தீயணைப்பு மீட்புக் குழுவினர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.