குதிரைச்சந்தல் அரசு பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாணவர்களுக்கு பொது அறிவுத் திறனை மேம்படுத்தவும், விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், வாசிப்புத் திறன் அதிகரிக்கும் வகையிலும், அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தும் விதத்தில் விரிவான தகவல்கள், 'தினமலர் -பட்டம்' இதழில் வெளியாகிறது .மாணவர்கள் ஆர்வமுடன் பட்டம் இதழை படித்து பயன் பெறுகின்றனர். இந்த சிறப்பிதழ் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்களான வழக்கறிஞர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஆனந்தஜோதி, ஹெலன் ஜெயா முன்னிலை வகித்தனர். பள்ளியின் பட்டம் இதழ் பொறுப்பாசிரியர் பேகம் வரவேற்றார்.இப்பள்ளியில் பயின்று தற்போது கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க செயலாளராக உள்ள வழக்கறிஞர் பழனிவேல், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரான வழக்கறிஞர் தமிழரசன், நோட்டரி பப்ளிக் ஆக உள்ள வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோர் 'தினமலர்-பட்டம்' இதழை மாணவர்களுக்கு வழங்கி கல்வியில் சிறக்க வாழ்த்தினர்.ஆசிரியர்கள் அனந்தகிருஷ்ணன், தேவகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.