உள்ளூர் செய்திகள்

மேலாண்மை படிக்க எழுதுங்கள் மேட்

நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், வணிகப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மேலாண்மை மற்றும் வணிகம் சார்ந்த முதுநிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு, 'மேட்' எனும் 'மேனேஜ்மென்ட் ஆப்டிட்யூட் டெஸ்ட்'. அறிமுகம்:கடந்த 1988ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்திய கல்வி அமைச்சகம் 'மேட்' தேர்வை தேசிய அளவிலான தேர்வாக கடந்த 2003ம் ஆண்டில் அங்கீகரித்தது. நெறிப்படுத்தப்பட்ட தேர்வுப் பிரிவுகள், புதுப்பிக்கப்பட்ட பாடப் பிரிவுகள் மற்றும் சுருக்கமான தேர்வுக் காலத்துடன் கூடிய நுழைவுத் தேர்வாக தற்போது விளங்குகிறது. நாட்டிலேயே மிகப்பெரிய ஆப்டிடியூட் தேர்வான 'மேட்' இந்தியா முழுவதும் உள்ள 600 பி-ஸ்கூல்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.தேர்வு முறை: காகித வடிவிலான எழுத்துத்தேர்வாகவும், கம்ப்யூட்டர் சார்ந்த தேர்வாகவும், இரண்டும் கலந்த தேர்வாகவும் நடத்தப்படுகிறது. லேங்குவேஜ் காம்ப்ரிஹென்ஷன், இன்டெலிஜென்ஸ் அண்டு கிரிட்டிக்கல் ரீசனிங், மேத்மெடிக்கல் ஸ்கில்ஸ், டேட்டா அனலைசிஸ் அண்டு சபீசியன்சி, எகனாமிக் அண்டு பிசினஸ் என்விரான்மெண்ட் ஆகிய 5 பகுதிகளைக் கொண்ட இத்தேர்வில் பகுதிக்கு 30 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண் கழிக்கப்படுகிறது.தேர்வு நேரம்: 120 நிமிடங்கள்தேர்வு கட்டணம்: காகித வடிவம் அல்லது கம்ப்யூட்டர் வாயிலாக எழுத 2,100 ரூபாயும், இரண்டு தேர்வுகளையும் எழுத 3,600 ரூபாயும் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: காகித வாயிலான தேர்வு - மார்ச் 2கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு - மார்ச் 12தேர்வு நடைபெறும் நாள்:காகித வாயிலான தேர்வு - மார்ச் 9கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு - மார்ச் 23விபரங்களுக்கு: https://mat.aima.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்