அரசு பொறியியல் கல்லுாரியில் 4வது பட்டமளிப்பு விழா
தர்மபுரி: தர்மபுரி அருகே, செட்டிகரையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில், 4வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் ரூபி மீனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுமதி ஆண்டறிக்கையை வாசித்தார்.இதில், 2025ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற, 217 மாணவ, மாணவியர் தங்களது இளங்கலை பொறியியல் பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இம்மாணவர்கள் ஒட்டு மொத்தமாக, 81 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மேலும், 2025 - 2026 கல்வியாண்டில் வேலைவாய்ப்பு நேர்காணல் மூலம், 183 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றனர். விழாவில், பி.என்.ஒய்., முதுநிலை நிதி ஆலோசகர் விஜய் சந்திரசேகர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், நிர்வாக பணியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.