உள்ளூர் செய்திகள்

நடப்பாண்டில் ஏழு யூனியனில் 4,736 பேர் புதியதாக சேர்க்கை

கோபி: கோபி உட்பட ஏழு யூனியனில், 543 அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறைவுற்ற நிலையில், 4,736 பேர் புதியதாக சேர்ந்துள்ளனர்.கோபி, நம்பியூர், சத்தி, தாளவாடி, அந்தியூர், பவானிசாகர், டி.என்.,பாளையம் என ஏழு யூனியன்களில், அரசு, நிதியுதவி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கஸ்துாரிபா காந்தி பாலிகா உறைவிடப்பள்ளி என, 543 பள்ளிகள், கோபி டி.இ.ஓ., (தொடக்க கல்வி) கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், 22 ஆயிரத்து 99 மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மே மாதம் முதல் துவங்கியது. கடந்த, 20ம் தேதி விஜயதசமியுடன் சேர்க்கை நிறைவு பெற்றது. அவற்றில் யூனியன் வாரியாக, கோபியில், 795 மாணவ, மாணவியர், அந்தியூரில், 730, பவானிசாகரில், 686, நம்பியூரில், 542, சத்தியமங்கலம், 1,011, தாளவாடி, 356, டி.என்., பாளையம், 616 பேர் என, 4,736 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதனால் ஏழு யூனியன்களில் மொத்த எண்ணிக்கை, 26 ஆயிரத்து, 835 பேராக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்