உள்ளூர் செய்திகள்

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும்

பெற்றோர் மாணவர் நலச்சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை;மத்திய அரசின் அரசாணைப்படி, தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்லுாரிகளில் 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு பெற, விதிமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை, அரசு ஒதுக்கீடாக பெற சட்ட வரையரை தயாரித்து, கவர்னர் அனுமதிக்கு அனுப்பட்டது.தற்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்து கொண்டிருக்கிறது. எனவே, 2020-21ம் கல்வி ஆண்டில் மேற்படி, 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற்றிட புதுச்சேரி அரசு ஆவணம் செய்ய வேண்டும்.சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வரைவை, அமல்படுத்த மத்திய உள்துறையுடன், முதல்வர் நேரடியாக பேசி, இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை துவங்குவதற்கு முன்பு, 50 சதவீத இடங்களை பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்