பத்தாம் வகுப்பு தேர்வு; 577 பேர் ’ஆப்சென்ட்’
மதுரை: நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரையில் ரெகுலர் மற்றும் தனியார் தேர்வர்களில் 577 பேர் எழுதவில்லை.மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் 44 ஆயிரத்து 135 பேருக்கும், தனித்தேர்வர்கள் ஆயிரத்து 145 பேருக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. நேற்று தமிழ் முதல் தாளை ரெகுலர் மாணவர்கள் 43 ஆயிரத்து 657 பேரும், தனித்தேர்வர்கள் ஆயிரத்து 46 பேரும் எழுதினர். 577 பேர் தேர்வெழுதவில்லை. இன்று(மார்ச் 16) தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.