உள்ளூர் செய்திகள்

மீன்வள பட்டப்படிப்பு இடங்கள் 60 ஆக உயர்வு

சென்னை: பொன்னேரி அரசு மீன்வளக் கல்லுாரியில், இளநிலை மீன்வள படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை, 40ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு மீன்வள பல்கலையின் அங்கமாக, சென்னையை அடுத்த பொன்னேரியில், அரசு மீன்வள கல்லுாரி உள்ளது. இதில், பி.எப்.எஸ்சி., எனப்படும், இளநிலை மீன்வள படிப்புக்கு, 40 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளன. இந்த படிப்புகளில் சேர, ஆன்லைன் வழியாக, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.tnfu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; 044 - 2797 1557 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்