இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ.82 லட்சம் அபராதம்: கனடா அரசு முடிவு
ஒட்டாவா: கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவைச் சேர்ந்த இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் கனடாவில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஆன்டோரியாவின் அல்பெர்டா, மிஸிசவுகா நகரங்கள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் புர்னபே நகரிலும், ஒட்டாவிலும் அந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.இந்நிலையில், 2020 டிச.,31 அன்றுடன் முடிவடைந்த ஆண்டில் தொழிலாளர் சுகாதார வரி செலுத்தவில்லை என இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம் விதித்து கனடா அரசு உத்தரவிட்டு உள்ளது.இதனால், நிறுவனத்தின் வரவு செலவு நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இன்போசிஸ் நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.ஒன்டாரியா, பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாகாணங்களில் தொழிலாளர் சுகாதார வரி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் சம்பளம், போனஸ் உள்ளிட்டவை அடிப்படையில் இந்த வரி நிர்ணயிக்கப்படுகிறது.